Skip to content
248

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.

குறள் 248

Porulatraar Pooppar Orukaal Arulatraar Atraarmar Raadhal Aridhu.

பொருள்

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

English

Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose 'benevolence', lose all; nothing can change their doom.

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம். குறள் #249

Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்