திருக்குறள்

246.

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.

திருக்குறள் 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.

பொருள்:

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

மு.வரததாசனார் உரை:

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

சாலமன் பாப்பையா உரை:

அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.