Skip to content
343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

குறள் 343

Atalventum Aindhan Pulaththai Vitalventum Ventiya Vellaam Orungu.

பொருள்

ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.

English

'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desire.

ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டும்.

Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்