திருக்குறள்

341.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன்.

திருக்குறள் 341

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன்.

பொருள்:

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

மு.வரததாசனார் உரை:

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.