திருக்குறள்

218.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்.

திருக்குறள் 218

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்.

பொருள்:

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

மு.வரததாசனார் உரை:

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.