திருக்குறள்

1260.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

திருக்குறள் 1260

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

பொருள்:

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.

மு.வரததாசனார் உரை:

கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.

சாலமன் பாப்பையா உரை:

கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.