திருக்குறள்

1032.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து.

திருக்குறள் 1032

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து.

பொருள்:

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

மு.வரததாசனார் உரை:

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:

உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.