திருக்குறள்

574.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்.

திருக்குறள் 574

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்:

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

மு.வரததாசனார் உரை:

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை:

வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.