திருக்குறள்

399.

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.

திருக்குறள் 399

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்:

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

மு.வரததாசனார் உரை:

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

சாலமன் பாப்பையா உரை:

தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.