திருக்குறள்

951.

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.

திருக்குறள் 951

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.

பொருள்:

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.

மு.வரததாசனார் உரை:

நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.