திருக்குறள்

981.

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

திருக்குறள் 981

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

பொருள்:

ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.

மு.வரததாசனார் உரை:

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.