திருக்குறள்

690.

இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் குறுதி பயப்பதாம் தூது.

திருக்குறள் 690

இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் குறுதி பயப்பதாம் தூது.

பொருள்:

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

மு.வரததாசனார் உரை:

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை:

தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.