திருக்குறள்

801.

பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

திருக்குறள் 801

பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பொருள்:

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

மு.வரததாசனார் உரை:

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.