திருக்குறள்

339.

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

திருக்குறள் 339

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

பொருள்:

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

மு.வரததாசனார் உரை:

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.