திருக்குறள்

541.

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.

திருக்குறள் 541

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.

பொருள்:

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

மு.வரததாசனார் உரை:

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.