திருக்குறள்

478.

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை.

திருக்குறள் 478

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை.

பொருள்:

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

மு.வரததாசனார் உரை:

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.