திருக்குறள்

227.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது.

திருக்குறள் 227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது.

பொருள்:

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

மு.வரததாசனார் உரை:

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.