திருக்குறள்

1065.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த துண்ணலின் ஊங்கினிய தில்.

திருக்குறள் 1065

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த துண்ணலின் ஊங்கினிய தில்.

பொருள்:

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

மு.வரததாசனார் உரை:

தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.