திருக்குறள்

402.

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.

திருக்குறள் 402

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.

பொருள்:

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

மு.வரததாசனார் உரை:

எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.