திருக்குறள்

848.

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.

திருக்குறள் 848

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.

பொருள்:

சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

மு.வரததாசனார் உரை:

தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.